உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மோடி முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும்: தமிழக பாஜக கோரிக்கை.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
58 பார்வைகள்

மதுரையில் 2026 மார்ச் 1ஆம் திகதி நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், திமுக ஆட்சி மீது பிரதமர் மோடி பல துறைகளில் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடு குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.


இதுகுறித்து தமிழக பாஜக வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மோடி திமுக ஆட்சியில் பல துறைகளில் பெருமளவு ஊழல் நடைபெற்றதாக குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணல் கொள்ளை, டாஸ்மாக் மதுபான முறைகேடு, அரசுப் பணி நியமன ஊழல், அரசு ஒப்பந்த முறைகேடு, பணியிட மாற்ற ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்ததாகவும், மொத்தமாக சுமார் 48 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறியதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திமுக அரசு 20 சதவீதம் ஊழல் செய்யும் அரசு என குற்றம் சாட்டியதை நினைவுகூர்ந்த தமிழக பாஜக, இதுவரை முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காமல் மௌனம் சாதிப்பதாக விமர்சித்துள்ளது.


அதேபோல், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் சுமார் மூன்று இலட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தை திமுக அரசு தடுத்து நிறுத்தியதாகவும், உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாததற்கான காரணம் விளக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் மக்கள் மன்றத்தில் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0