உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஒடிசாவில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
50 பார்வைகள்

ஒடிசா மாநில சுரங்கத் துறை துணை இயக்குநராகப் பணியாற்றி வந்த தேவபிரதா மொகந்தி லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.நிலக்கரி விற்பனைக்கு அனுமதி பெற்ற ஒரு வர்த்தகரிடமிருந்து ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது, விஜிலென்ஸ் அதிகாரிகள் அவரை பிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து புவனேஸ்வரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பிலும், பத்ராக் மாவட்டத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.சோதனையின் போது வீட்டிலிருந்த அலமாரிகளில் கட்டுக்கட்டாக பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தமாக ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அலுவலக மேசை டிராயரில் இருந்து ரூ.1.20 லட்சமும் கைப்பற்றப்பட்டது.அத்துடன், புவனேஸ்வரில் உள்ள இரு மாடி வீட்டுக்கான ஆவணங்களும், 130 கிராம் தங்க நகைகளும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.


இதுவரை பிடிபட்ட ஊழல் வழக்குகளில் இது மிகப்பெரிய தொகை என விஜிலென்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

42 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

28 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0