அருணாச்சல் பெண்கள் அவமதிப்பு விவகாரம் – தம்பதிக்கு நீதிமன்றக் காவல்.!
டெல்லி நகரில் அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று இளம் பெண்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20ஆம் திகதி, அவர்கள் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட பழுது பார்ப்பு பணியின்போது ஏற்பட்ட தூசி காரணமாக, கீழ் வீட்டில் வசிக்கும் ஹர்ஷ் சிங் மற்றும் அவரது மனைவி ரூபி ஜெயின் ஆகியோருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன் போது, இருவரும் குறித்த பெண்களை இன அடிப்படையில் அவமதித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாளவியா நகர் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்து, சந்தேக நபர்களை கைது செய்தது.பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 11ஆம் திகதி வரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.