உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

முதியோர் இல்லத்தில் தஞ்சம் அடைந்த தாய் – ஆட்கொணர்வு மனு தள்ளுபடி.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
51 பார்வைகள்

திண்டுக்கல்லைச் சேர்ந்த செல்வகணேஷ் என்பவர், தனது 72 வயதுடைய தாயார் ஜெயலட்சுமி காணாமல் போயுள்ளதாகக் கூறி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதிகள் ஜி.கே. இளந்திரையன் மற்றும் ஆர். பூர்ணிமா ஆகியோர் விசாரித்தனர்.


விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஜெயலட்சுமி திருமணம் ஆகாதவர் என்றும், அதிகளவான சொத்துகள் கொண்டவர் என்றும் தெரியவந்தது. அவர் உதவிப் பேராசிரியராக பணியாற்றியவர் என்றும், மனுதாரர் செல்வகணேஷை தத்தெடுத்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டது.ஆனால், செல்வகணேஷ் தன்னை மிரட்டி சில சொத்துகளை அபகரித்ததாக ஜெயலட்சுமி தெரிவித்தார்.

இதனால் அச்சமடைந்து, அவர் முதியோர் இல்லத்தில் தஞ்சம் அடைந்ததாகவும் கூறினார். இதனையடுத்து, தன்னை காணவில்லை எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பொலிஸார் ஜெயலட்சுமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, செல்வகணேஷின் நடத்தை காரணமாக தனது உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்பட்டதாகவும், அதனால் முதியோர் இல்லத்தில் பாதுகாப்பு தேடியதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தன்னிடம் சட்டவிரோதமாகவும் கட்டாயப்படுத்தியும் கையெழுத்து பெறப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரினார்.இதனைத் தொடர்ந்து, ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், மனுதாரர் செல்வகணேஷுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. அந்தத் தொகையை ஒரு வாரத்திற்குள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.


மேலும், ஜெயலட்சுமியிடமிருந்து சட்டவிரோதமாக கையெழுத்து பெறப்பட்டதாகக் கூறப்படும் ஆவணங்கள் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டப் பதிவாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் காவல் துறை வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவருக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.இவ்வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை ஜூன் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

41 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0