உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

2026 தேர்தல்: மூன்றாம் கட்ட வாக்குறுதிகள் அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
65 பார்வைகள்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அறிவித்து வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை ஒட்டி, எடப்பாடி பழனிசாமி மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.
ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்ததுடன், சொத்து வரி, வீட்டு வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.இதனைத் தணிக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக 10,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீன்பிடித் தடைக்காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை 8,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


மேலும், ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று வழங்கப்படும் பொங்கல் தொகுப்புடன் கூடுதலாக 1,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் 300 அலகுகளில் இருந்து 450 அலகுகளாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 அலகுகளில் இருந்து 1,400 அலகுகளாகவும் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.நகரப் பகுதிகளில் நடைபாதை ஓரமாக வியாபாரம் செய்பவர்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

41 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0