உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சிறுமிகள் மீது பாலி*யல் பலாத்காரம் – ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
49 பார்வைகள்

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் ஜோதிடராக இருந்த 52 வயதுடைய ராமகிருஷ்ணன் என்பவருக்கு 200 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் மானகிரி பகுதியைச் சேர்ந்த இவர், ஜோதிடம் மற்றும் தோஷநிவாரணப் பூஜைகள் செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஒரு தாய் தனது 18 மற்றும் 14 வயதுடைய இரு மகள்களை அழைத்துக்கொண்டு ஜோதிடம் பார்க்க வந்துள்ளார். குழந்தைகள் சரியாகப் படிக்கவில்லை என்பதால் பரிகாரம் செய்யுமாறு கேட்டதாக கூறப்படுகிறது.அதனைத் தொடர்ந்து, பரிகார பூஜைக்காக தனது வீட்டிற்கு குழந்தைகளை அழைத்துவரும்படி ஜோதிடர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

தாயார் குழந்தைகளுடன் அவரது வீட்டிற்குச் சென்றபோது, தாயை ஒரு அறையில் தனியாக இருக்கும்படி கூறி, இரு சிறுமிகளையும் வேறு அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.மேலும், இந்த விடயத்தை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்றும், கூறினால் பெற்றோருக்கு தீங்கு ஏற்படும் என மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பயந்துபோன சிறுமிகள் சம்பவத்தை வெளிப்படுத்தாமல் இருந்துள்ளனர்.இரண்டு ஆண்டுகள் கழித்து, இரு சிறுமிகளுக்கும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டதையடுத்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், பால்வினை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையின் போது சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.


இதையடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து, குற்றம்சாட்டப்பட்ட ஜோதிடரை கைது செய்தது. வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராமகிருஷ்ணனுக்கு 200 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும், பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

41 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0