உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தையிட்டி திஸ்ஸ விகாரை விடயம்: பௌத்த சாசன அமைச்சு பாரபட்சமாக செயற்படுகிறது – பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தொடர்பான காணி விவகாரத்தில் பௌத்த சாசன அமைச்சு பாரபட்சமான முறையில் செயற்படுகின்றது என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட எமது காணிகளை மீள எமக்கு ஒப்படைக்குமாறு வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றோம். இவ்விடயம் தொடர்பாக கொழும்பில் கடந்த புதன்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

எனினும், அந்தப் பேச்சுவார்த்தைக்கு எமக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை.எமது காணிகள் எமக்குச் சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்தும் அனைத்து சட்டப்பூர்வ ஆவணங்களையும் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளோம். இருந்தபோதிலும், எமது கருத்துகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படாமல் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.


எம்மை அழைக்காமல், எமது காணிகளை ஆக்கிரமித்ததாக குற்றஞ்சாட்டப்படும் விகாராதிபதியை அழைத்து கலந்துரையாடல் நடத்துவது, அந்த ஆக்கிரமிப்புக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படுவதாகவே எங்களால் புரிந்துகொள்ளப்படுகிறது,” என தெரிவித்தனர்.மேலும், இவ்விடயத்தில் சார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணை முன்னெடுக்கப்பட்டு, காணி உரிமை தொடர்பான உண்மை நிலை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளும் சமமாகக் கேட்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

61 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

80 0 0
இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

48 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

57 0 0