உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மார்ச் 12 முதல் அதிகளவு சமையல் எரிவாயு சந்தைக்கு!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் சந்தைக்கு அதிகளவிலான லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், கடந்த சில நாட்களைப் போலவே இன்றும் நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதைக் காணக்கூடியதாக இருந்தது.

லிட்ரோ மற்றும் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகப் பல பகுதிகளில் நுகர்வோர் விசனம் தெரிவித்ததுடன், எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருப்பதையும் காணமுடிந்தது.ஆயினும், தேவையான கையிருப்பைப் பேணுவதற்காக புதிய கொள்வனவு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய பெப்ரவரி மாதம் முடிவதற்குள் மூன்று எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், இன்று காலை சில பகுதிகளுக்கு புதிய எரிவாயு கையிருப்புகள் கிடைக்கப்பெற்றிருந்தாலும், இன்னும் பல பகுதிகளுக்கு லிட்ரோ எரிவாயு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், பல இடங்களில் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடும் தொடர்கின்றது.

இதேவேளை, பெப்ரவரி 26ஆம் திகதி முதல் லாஃப்ஸ் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

61 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

81 0 0
இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

48 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

57 0 0