உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியனை கடந்துள்ளது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

தேசிய தாவரவியல் பூங்காக்கள் 2025ல் 1.394 பில்லியன் ரூபா வருமானம் சம்பாதித்தது – கடந்த 2025ஆம் ஆண்டில் தேசிய தாவரவியல் பூங்காக்களின் மொத்த வருமானம் 1.394 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதாக தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வருமானம் 2024ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7% அதிகரித்துள்ளது, அதற்கான முக்கிய காரணமாக நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

‘டித்வா’ புயலின் தாக்கம் இருந்தபோதிலும், பூங்காக்களின் இயற்கை மற்றும் தாவரவியல் ஈர்ப்புகள் மூலம் வருமானம் உயர்ந்துள்ளது. திணைக்களத்தின் கீழ் பேராதனை, ஹக்கலா, கம்பஹா, சீதாவக்க ஈர வலய, மிரிஜ்ஜவில வறண்ட வலய மற்றும் கணேவத்த வன மூலிகைத் தோட்டங்கள் நிர்வகிக்கப்படுகின்றன; இதில், பேராதனை பூங்காவிற்கு கடந்த ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக அனைத்து பூங்காக்களையும் பார்வையிட இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்டசுற்றுலாப் பயணிகள் வந்தனர். நுழைவுக் கட்டணம், தாவர விற்பனை மற்றும் இதர வசதிகள் மூலம் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

61 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

81 0 0
இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

48 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

57 0 0