உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கல்லுண்டாய் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கல்லுண்டாய் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஒன்று, வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் இன்று (20.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.


கல்லுண்டாய் பகுதியில் குடியேற்றப்பட்டுள்ள மக்கள் ஒவ்வொரு மழைக் காலத்திலும் வெள்ளப் பெருக்கினால் இடம்பெயர வேண்டிய துரதிர்ஷ்டநிலையை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.இது தொடர்பில் இலங்கை பொறியியலாளர் சங்கம் வடக்கு மாகாணக் கிளையினரால் விசேட திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், நிலம் நிரப்புதல் தொடர்பான ஆரம்பகட்ட ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


கலந்துரையாடலின் போது, அருகிலுள்ள கொத்துக்கட்டிக்குளம் தூர்வாரப்பட்டு, அங்கிருந்து பெறப்படும் மண்ணைப் பயன்படுத்தி கல்லுண்டாய் குடியேற்றப் பகுதியில் நிலம் நிரப்பும் பணிகளை முன்னெடுப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மேலும், குடியேற்றப் பகுதிக்கு அண்மையில் செல்லும் வாய்க்காலைத் தூர்வாருவதும் அவசியம் எனக் குறிப்பிடப்பட்டது.அத்துடன், கொத்துக்கட்டிக்குளம் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்த பின்னர், அதன் பராமரிப்புப் பொறுப்பை வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு ஒப்படைக்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டது.


இவ்விடயங்கள் தொடர்பில் இலங்கை பொறியியலாளர் சங்கம் வடக்கு மாகாணக் கிளை, சண்டிலிப்பாய் பிரதேச செயலகம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை மற்றும் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் ஆகியவை இணைந்து விரைவான திட்ட மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஆளுநர் பணிப்புரை வழங்கினார்.இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், இணைப்புச் செயலாளர்கள், யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர் மற்றும் தொடர்புடைய அரசியல் நிர்வாக பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

61 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

80 0 0
இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

48 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

57 0 0