உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராய விஜித தலைமையில் விசேட குழு நியமனம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

நீண்டகாலமாக இழுபறியாக இருந்து வரும் மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடிய நாடாளுமன்ற அமர்வில், குறித்த தெரிவுக்குழுவின் உறுப்பினர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
அந்த தெரிவுக்குழுவின் தலைவராக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.


பிரதி அமைச்சர்களான முனீர் முலபர், சுனில் வட்டகல, அருண் ஹேமசந்திரா ஆகியோரும், நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், லக்ஷ்மன் நிபுனராச்சி ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.மேலும், இரா. சாணக்கியன், சமன்மலி குணசிங்க, தர்மபிரிய விஜேசிங்க, சந்தன சூரியாராச்சி, நிஷாம் காரியப்பர் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது தொடர்பில் நிலவும் அரசியல் மற்றும் சட்ட சிக்கல்களுக்கு தீர்வு காண்பதே இத்தெரிவுக்குழுவின் பிரதான நோக்கமாகும். குறித்த குழு தனது அறிக்கையை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

61 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

80 0 0
இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

48 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

57 0 0