உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நாமல் சிறை செல்வது செய்த பாவங்களுக்கே.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
39 பார்வைகள்

“நாமல் ராஜபக்ஷ சிறைக்குச் சென்றால் அங்கிருந்தே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என மொட்டுக் கட்சி கூறுவது வேடிக்கையானது. அவர் சிறைக்குச் செல்வது தேர்தல் வெற்றிக்காக அல்ல, கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட ஊழல் மற்றும் குற்றங்களுக்காகவே.” – என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

மொட்டுக் கட்சியின் உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் ஊடகங்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது,
“யாரையும் அரசியல் பழிவாங்கலுக்காகச் சிறையில் அடைக்கும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை. ஆனால், மக்கள் பணத்தைத் திருடியவர்கள் மற்றும் அரச அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.

சிறையில் இருந்து கொண்டு தேர்தலில் வெல்லலாம் என்பது பழைய காலத்துக் கற்பனை. நாட்டு மக்கள் ஊழலுக்கு எதிரான தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர். குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதே எமது நோக்கம். அதைத் திசைதிருப்ப இவ்வாறான கருத்துக்களை மொட்டுக் கட்சியினர் முன்வைத்து வருகின்றனர்.

நாமல் ராஜபக்ஷ சிறைக்குச் சென்றால், அது அவர் செய்த செயல்களுக்கான அறுவடையே தவிர, தேர்தல் வியூகம் அல்ல.” – என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

5 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

54 0 0
இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

46 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

54 0 0