உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இளம் வயதில் எழுதிய கடிதம் ஏலத்திற்கு.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
85 பார்வைகள்

பிரித்தானியாவின் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது சிறுவயதில் கையினால் எழுதிய அரிய கடிதம் ஒன்று,எதிர்வரும் 27-ஆம் திகதி ஏலத்திற்கு வரவுள்ளது.சுமார் 4,000 பவுண்டுகள் வரை ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்தக் கடிதம், 1936 முதல் 1940-க்கு இடைப்பட்ட காலத்தில் மகாராணி 10 முதல் 12 வயதிற்குள் இருந்தபோது எழுதப்பட்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வின்ட்சர் ரோயல் லொட்ஜின் தலைமைப் பணிப்பெண் பீட்ரைஸ் ஸ்டில்மேனுக்கு எழுதப்பட்ட இந்த ஒரு பக்கக் கடிதத்தில், நாய், குதிரை மற்றும் சிறு குழந்தைகளின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.மேலும், “அங்குள்ள பறவைகள் நலமாக உள்ளனவா என்றும், தங்கமீன்கள் இறந்துவிடவில்லையே?” என்றும் மகாராணி மிகுந்த அக்கறையுடன் விசாரித்துள்ளார்.வில்லியம் வெஸ்டாகாட் என்பவர், 2024ஆம் ஆண்டு தனது தாயாரின் மறைவிற்குப் பிறகு அவரது படுக்கைக்கு அடியில் இருந்த ஒரு பெட்டியிலிருந்து இந்தக் கடிதத்தைக் கண்டெடுத்தார்.

1940 ஆம் ஆண்டு வான்வழித் தாக்குதலில் பீட்ரைஸின் உறவினர் கொல்லப்பட்டபோது, அவரது குடும்பத்தினரை ரோயல் லொட்ஜிற்கு அழைத்து இளவரசிகளுடன் விளையாட அப்போதைய ராணி அனுமதித்திருந்ததும் இக்கடிதங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஹேன்சன்ஸ் ஏல நிறுவனத்தைச் சேர்ந்த ஜஸ்டின் மேத்யூஸ், தனது 27 ஆண்டுகால ஏலத்துறை அனுபவத்தில் இவ்வளவு அழகான ஒரு பொருளைத் தான் பார்த்ததில்லை எனத் தெரிவித்துள்ளார்.இந்தக் கடிதத்துடன் இளவரசி மார்கரெட் எழுதிய மற்றொரு கடிதமும் ஏலத்திற்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

85 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0