உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.!
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவிற்கு இன்று பெரும் சரிவை சந்தித்துள்ளது.
அமெரிக்கா–ஈரான் அணுசக்தி தொடர்பான மோதல்கள் குறையக்கூடும் என்ற நம்பிக்கை, இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்ற இரண்டாம் கட்ட மறைமுகப் பேச்சுவார்த்தையில், இரு நாடுகளும் அணுசக்தி விவகாரத்தில் முக்கிய ‘வழிகாட்டும் கொள்கைகளில்’ புரிதலுக்கு வந்துள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி தெரிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பிரெண்ட் எண்ணெய் 1.8% குறைந்து 67.42 டொலராகவும், அமெரிக்க WTI எண்ணெய் 0.9% குறைந்து 62.33 டொலராகவும் சரிந்தது. இது பெப்ரவரி மாதத் தொடக்கத்திற்கு பிறகு பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த விலையாகும்.