உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஆந்திராவில் ஏழு வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொ*லை!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
53 பார்வைகள்

ஆந்திரப் பிரதேசத்தின் மதனப்பள்ளி எனும் நகராட்சிப் பகுதியில் ஏழு வயது சிறுமி ஒருவர் தனது அயல் வீட்டுக்காரரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக இந்தியப் பொலிஸார் தெரிவித்தனர்.செவ்வாய்க்கிழமை (17) சந்தேக நபரின் வீட்டிலிருந்து சிறுமியின் உடலை பொலிஸார் மீட்டபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் சிறுமி காணாமல் போனதை அடுத்து, அவரது குடும்பத்தினர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு எதிரே வசிக்கும் சந்தேக நபர், சிசிடிவி காட்சிகள் குற்றத்தை உறுதிப்படுத்திய பின்னர் அடையாளம் காணப்பட்டார்.இது காவல்துறையினரை முழுமையான விசாரணைக்கு இட்டுச் சென்றது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தைத் தூண்டியது, குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டின் அருகே ஒரு பெரிய கூட்டம் கூடி, சந்தேக நபருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரினர்.நிலைமை மேலும் பதட்டமாக மாறியதனால், பொலிஸார் குறித்த பகுதியில் பாதுகாப்பை அதிகரித்தனர்.

அரசியல் நோக்கங்களைக் கொண்ட சில நபர்கள் கூட்டத்தின் கோபத்தைத் தூண்டிவிட்டதாகவும், பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.இதற்கு பதிலளிக்கும் விதமாக, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க மேலதிக படைகள் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0