உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்கா– ஈரான் இரண்டாம் சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தை ஜெனிவாவில் தொடக்கம்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
44 பார்வைகள்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இரண்டாம் சுற்று அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தற்போது ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது.அமெரிக்கா, ஈரான் சர்வதேச விதிகளுக்கு அப்பாற்பட்டு அதிகளவு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்திருக்கிறதென குற்றம்சாட்டி, புதிய கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை வலியுறுத்தி வருகிறது.

முன்னதாக ஓமனில் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் எவ்வித சமரசமும் எட்டப்படாத நிலையில், ஜெனிவா பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தபோது, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி “உலகின் வலிமையான இராணுவம் கூட சில நேரங்களில் கடுமையான அடி வாங்கி மீண்டும் எழ முடியாமல் தவிக்கும்” எனக் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி மையங்களுக்கு நடத்திய தாக்குதல்கள், ஹார்முஸ் நீரிணைப்பில் ஈரானின் இராணுவ பயிற்சி, பிராந்திய பதற்றத்தை அதிகரித்துள்ளன. அமெரிக்க படைகள் மேற்காசியப் பகுதியில் குவிக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது.இந்த ஜெனிவா பேச்சுவார்த்தை சுமுக முடிவை அடையுமா, அல்லது ஒரு பாரிய போருக்கு வழிவகுக்குமா என்பது உலக நாடுகளின் கவனத்திலும் அச்சத்திலும் உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

85 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0