உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வட மேற்கு பாகிஸ்தானில் தொடரும் குண்டுவெடிப்பு: 12 பேர் பலி.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
44 பார்வைகள்

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவின் பஜௌர் மாவட்டத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் பதினொரு பாதுகாப்புப் படையினரும் ஒரு குழந்தையும் உயிரிழந்துள்ளனர் என பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
பஜௌர் பகுதியில் அமைந்திருந்த பாதுகாப்புச் சோதனைச் சாவடியை நோக்கி வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் செலுத்தப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டதன் விளைவாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள பொலிஸ் அதிகாரி ஜாபர் கான் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


இக் குண்டுவெடிப்பின் தாக்கத்தால் அருகிலிருந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு முன்னதாக, ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அண்மையில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலைய நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்திருந்தனர்.


பன்னு மாவட்டத்தில் இடம்பெற்ற தாக்குதலில் பதினேழு பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்கொலை குண்டுதாரி ஒருவர் வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனத்தை மாவட்டத்திலுள்ள சமயக் கல்வியகச் சுவரில் மோதச் செய்து வெடிக்கச் செய்ததாகவும், அதன் விளைவாகவே உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

85 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0