உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கர்ப்ப கால படப்பிடிப்பில் தாய்; குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தை.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
51 பார்வைகள்

கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஜே.பி. நகரில் வசித்து வரும் தம்பதியரின் 3 வயது மகன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சரண்ராஜ் – ஸ்வாதி தம்பதியரின் மகன் லக்ஸ்வீர் (3) என்பவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்வாதி தற்போது இரண்டாவது குழந்தைக்கு 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

கடந்த சனிக்கிழமை, கிடெனஹள்ளி கிராமத்தில் உள்ள தி ஷயர் ஸ்டுடியோ எனும் படப்பிடிப்பு நிலையத்திற்கு கர்ப்ப கால புகைப்படம் எடுக்க ஸ்வாதி தனது மகனுடன் சென்றுள்ளார்.அவர் புகைப்படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, ஸ்டூடியோ வளாகத்தில் உள்ள மூன்று குளங்களின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போனது. பின்னர், ஸ்டூடியோ ஊழியர் ஒருவர் குழந்தை குளத்தில் மூழ்கியிருப்பதை கண்டறிந்தார்.


உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது.குளத்தின் ஆழம் 2 அடி மட்டுமே இருந்ததாக கூறப்படுகின்றது. எனினும், குளத்தில் அதிக சேறு இருந்ததால் குழந்தை வெளியே வர முடியாமல் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், குழந்தையின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0