உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

டில்லி பறந்தார் ஜனாதிபதி அநுர.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவின் தாக்கங்கள் குறித்த சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.05 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் புதுடில்லிக்குப் புறப்பட்டார். அவருடன் உயர்மட்டத் தூதுக்குழுவொன்றும் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெறும் இந்த சர்வதேச மாநாடு, மனிதகுலத்தின் நலனுக்காக செயற்கை நுண்ணறிவைப் பொறுப்பான முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45 இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.

மாநாட்டின் முக்கிய அங்கமாக, நாளைமறுதினம் வியாழக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விசேட உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்காலப் பாதை மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் அதன் பங்களிப்பு குறித்து இந்த மாநாட்டில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

100 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

91 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

39 0 0