கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்ற சந்திப்பு.!
‘ஆளுமைகளுடனான ஓர் அந்திமாலை’ சந்திப்பும் உரையாடலும் கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் நேற்று இடம்பெற்றது.
கல்லூரியின் முதல்வர் எஸ். பிரசாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விலே கலை இலக்கியத்துறையில் கோலோச்சி நிற்கும் ஆளுமைகளான தமிழ் நாடு எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி முதல்வரும், பிரபல ஓவியருமான டிராஸ்கி மருது, தமிழ்நாடு கலைமாமணி ஜீவானந்தன் எனப்படும் ஓவியர் ஜீவா, கனடா – தாய்வீடு இதழின் ஆசிரியர் ஜெ. திலீப்குமார். கனடா டொரண்டோ பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பொன்.விவேகானந்தன் புத்தக ஆக்கச் சிற்பிகளான விவேகானந்தன் மற்றும் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பினை மல்லியப்பூ சந்தி திலகர் அவர்கள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






