உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரான்சில் பனிச்சரிவில் உயிரிழந்த இரு பிரிட்டிஷ் பிரஜைகள்!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
51 பார்வைகள்

கடந்த வாரம் பிரான்சின் ஆல்ப்ஸ் ஸ்கை ரிசார்ட்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் உயிரிழந்த இரண்டு பிரிட்டிஷ் பனிச்சறுக்கு வீரர்ளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.தென்கிழக்கு பிரான்சில் உள்ள பிரபலமான பனிச்சறுக்கு சுற்றுலா நகரமான வால்-தி-சேரில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவில் உயிரிழந்த மூன்று பேரில் ஸ்டூவர்ட் லெஸ்லி மற்றும் ஷான் ஓவரி ஆகியோர் பிரிட்டிஷ் பிரஜைகள் ஆவார்.

உயிரிழந்த மற்றைய நபர் பிரான்ஸ் நாட்டவர் என அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.இந்த துயரச் சம்பவம் நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக பிரான்சின் தேசிய வானிலை முன்னறிவிப்பாளர்கள் இத்தாலியின் எல்லையை ஒட்டிய சவோய் பகுதிக்கு சிவப்பு பனிச்சரிவு எச்சரிக்கையை வெளியிட்டிருந்ததுடன், பனிச்சறுக்கு வீரர்களும், சாகச வீரர்களும் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தியிருந்தது.

இதேவேளை, பிரிட்டிஷ் பிரஜைகளின் இறப்புகளை இங்கிலாந்து வெளியுறவு அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது.=சம்பவத்தை தொடர்ந்து நாங்கள் பிரான்ஸ் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும், மேலும் தூதரக உதவியை வழங்க தயாராக இருக்கிறோம் என்றும் கூறியது.

பிரெஞ்சு ஆல்ப்ஸ் ரிசார்ட்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் மற்றொரு பிரித்தானிய பனிச்சருக்கு வீரர் உயிரிழந்த ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

43 0 0