உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; இரு பொலிஸ் அதிகாரிகள் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

கொழும்பு – ஜிந்துப்பிட்டியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடானது, கடந்த சனிக்கிழமை இரவு (14) இடம்பெற்றிருந்த நிலையில் மன்னாரை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் கடமை தவறியதற்காக நடமாடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிகை அலங்கார நிலையமொன்றை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமானது, ரணசிங்க ஆராச்சிகே சங்க ஷிரந்த எனப்படும் புளூமெண்டல் சங்க என்பவரின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞர் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரவெளி – வெள்ளிமலை பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞர் கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும், சம்பவ தினம் சிகை அலங்கரிப்புக்கு சென்ற நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

62 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

90 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

38 0 0