உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

புதிய குடியுரிமை விதி: பிரித்தானியாவின் இரட்டை குடியுரிமை கொண்ட பெண்களுக்கு பாதிப்பு.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
43 பார்வைகள்

பிரித்தானியாவின் புதிய குடியுரிமை விதிமுறைகள், இரட்டை குடியுரிமை கொண்ட பெண்களுக்கு பாரபட்சமாக அமைந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.புதிய விதியின் படி, இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் பிரித்தானியாவிற்குள் நுழையும்போது கட்டாயமாக பிரித்தானிய கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடைமுறை எதிர்வரும் பெப்ரவரி 25 முதல் அமுலுக்கு வரும்.


பிரித்தானிய கடவுச்சீட்டு இல்லாதவர்கள் சுமார் 2.3 இலட்சம் இலங்கை ரூபாய் செலவில் ‘சேர்ந்துரிமைச் சான்றிதழ்’ (Certificate of Entitlement) பெற்று, அதனை தங்களது இரண்டாவது நாட்டின் கடவுச்சீட்டுடன் இணைக்க வேண்டும். மேலும், இரண்டு கடவுச்சீட்டுகளிலும் பெயர்கள் துல்லியமாக பொருந்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கிரேக்கம் சட்டப்படி, திருமணத்திற்குப் பிறகும் பெண்கள் தங்களது பிறந்த வீட்டுப் பெயரை வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்களின் பிரித்தானிய கடவுச்சீட்டில் கணவரின் பெயர் இருந்தால், இரண்டு கடவுச்சீட்டுகளிலும் பெயர்கள் வேறுபடும். இதனால் பயண அனுமதி மறுக்கப்பட வாய்ப்பு உள்ளது.


ஸ்பெயின் நாட்டில் ஒருவருக்கு இரண்டு குடும்பப் பெயர்கள் இருப்பது வழக்கம். எனினும், பிரித்தானிய கடவுச்சீட்டில் ஒரு பெயரே இடம்பெறும். இதன் காரணமாக பெயர் பொருத்தமின்மை ஏற்பட்டால், வானூர்தி நிறுவனங்கள் பயணத்தைமறுக்கக்கூடும்.இந்நிலையில், பெயர் பொருத்தமின்மை தொடர்பான சிக்கல்களை தனிப்பட்ட முறையில் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஆவணங்களில் பெயரை மாற்ற முடியாது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தால் விதிவிலக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இந்த புதிய விதியிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

43 0 0