உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இலங்கையில் 19 நாட்கள் பொது விடுமுறை; மதுபான விற்பனைக்குத் தடை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

2026 ஆம் ஆண்டில் பொது விடுமுறை நாட்கள் மற்றும் பௌர்ணமி தினங்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு நாடு தழுவிய ரீதியில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மேலதிக ஆணையாளரும், மதுவரித் திணைக்கள பேச்சாளருமான ஏ.ஏ.ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த 19 நாட்களில் 12 பௌர்ணமி தினங்கள், சுதந்திர தினம், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நாட்கள், உலக மது ஒழிப்பு தினம் மற்றும் நத்தார் தினம் ஆகியவை அடங்கும்.

அதன்படி ஜனவரி 3, பெப்ரவரி 1,மார்ச் 2, ஏப்ரல் 1, மே 1, மே 2, மே 30, ஜூன் 29, ஜூலை 29, ஓகஸ்ட் 27, செப்டம்பர் 26, ஒக்டோபர் 25, நவம்பர் 24, டிசம்பர் 23 ஆகிய பௌர்ணமி தினங்களிலும் பெப்ரவரி 4 (சுதந்திர தினம்), ஏப்ரல் 13 (சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முந்தைய தினம்), ஏப்ரல் 14 (சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினம்), ஒக்டோபர் 3 (உலக மது ஒழிப்பு தினம்), டிசம்பர் 25 (நத்தார் தினம்) அகிய தினங்களிலும் மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு (ஏப்ரல் 13, 14) மற்றும் நத்தார் தினம் (டிசம்பர் 25) ஆகிய மூன்று நாட்களில் மட்டும் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்களில் தங்கியிருக்கும் விருந்தினர்களுக்கு மட்டும் மதுபானம் வழங்க அனுமதி உண்டு. இவற்றில் சுற்றுலா சபையினால் அங்கீகரிக்கப்பட்ட 3 நட்சத்திர மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பீடு பெற்ற விருந்தகங்கள், மதுவரி உரிமம் FL 07 ஐக் கொண்ட Boutique விருந்தகங்கள், பூட்டிக் வில்லாக்கள் மற்றும் சிறப்பு அனுமதிகளின் கீழ் இயங்கும் விருந்தகங்கள் ஆகியவை அடங்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

62 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

90 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

38 0 0