பிரதமர் மோடி அடுத்த வாரம் இஸ்ரேல் விஜயம்.!
பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் இஸ்ரேல் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த விஜயம், அவரது மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் இஸ்ரேல் பயணமாகவும், 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெறும் முதல் விஜயமாகவும் அமைகிறது. இரு நாடுகளுக்கிடையிலான மூலோபாய கூட்டாண்மை வலுப்பெறும் சூழலில் இந்தப் பயணம் இடம்பெறுகிறது.
விஜயம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு புது டெல்லியால் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வழங்கிய அழைப்பின் பேரில் பெப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் இந்த விஜயம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.