கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத சிகரெட்டுடன் ஒருவர் கைது.!
கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்தில், நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று (17) அதிகாலை விமான நிலைய வருகை முனையத்தில் சோதனை நடத்தியபோது சந்தேக நபரைப் பிடித்துள்ளனர்.
பொலிஸார் கூறியதாவது, கைது செய்யப்பட்ட நபரிடம் 12,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கிடைத்துள்ளதாகவும், அவர் கம்பளையைச் சேர்ந்த 58 வயதுடையவர் என்றும் தகவல் கிடைக்கின்றது.சம்பவம் தொடர்பாக, விமான நிலையப் பிரிவு போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.