லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு!
வவுனியாவில் கடந்த சில நாட்களாக லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமையிலிருந்து நகரத்தில் உள்ள பல விற்பனை நிலையங்களில் எரிவாயு சிலிண்டர்கள் முற்றாக முடிந்து உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விற்பனையாளர்கள், நிறுவனத்திடமிருந்து லொறிகள் வரவில்லை என்பதையும், சில நாட்களில் விநியோகம் சீராகும் என்றும் கூறியுள்ளனர்.