உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஊழலற்ற, போதைப்பொருள் அற்ற தேசத்தை உருவாக்க தகுதியான அரச சேவை அவசியம் – வடக்கு ஆளுநர் வேதநாயகன் வலியுறுத்து!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், டிஜிட்டல் மயமாக்கல், போதைப்பொருள் அற்ற தேசம் உருவாக்குதல் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதில் அரசு கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு, உயர் திறனும் தகுதியும் கொண்ட அரச சேவை அவசியமாகும் என குறிப்பிட்டு, இதற்காக அதிகாரிகளைத் திறம்படத் தயார்படுத்தும் ஐடெக் புலமைப்பரிசில் செயற்றிட்டம் முக்கிய பங்கு வகிக்கின்றது என்று கூறினார்.

இந்த கருத்தை அவர், இந்தியத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்ட தினத்தின் முன்னிலையில், யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக உரையாற்றும் போது வெளியிட்டார். அவர் மேலும், 2024 ஆம் ஆண்டில் 40 அதிகாரிகள், 2025 ஆம் ஆண்டில் 45 அதிகாரிகள் பயனடைந்துள்ளார்கள்.இந்த ஆண்டில் இதுவரை 3 அதிகாரிகள் பயிற்சி பெற்றுள்ளனர் எனத் தெரிவித்தார்.

இந்தியாவில் வழங்கப்பட்ட பயிற்சிகள், அதிகாரிகளின் பார்வையை விரிவுபடுத்தி, நாட்டிற்கு புதிய நம்பிக்கை, உலகளாவிய பார்வை மற்றும் சிறந்த பொதுச் சேவை திறனுடன் திரும்பச் செய்யும் திறன் அளிக்கிறது. எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, கணக்கியல் மற்றும் வரிவிதிப்பு போன்ற துறைகளில் மேலதிக வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும், இத்தகைய திறமையான அதிகாரிகள் வடக்கு மாகாணத்தின் நிலையான அபிவிருத்திக்கு அவசியமானவை எனவும் அவர் வலியுறுத்தினார்.

நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. ரஜீவன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பீடாதிபதிகள் மற்றும் ஐடெக் திட்டத்தினூடாக பயிற்சி பெற்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

62 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

90 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

38 0 0