உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சுதந்திர தின கறுப்புக் கொடி போராட்டங்களை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தக் கூடாது: அபயரத்ன.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

இலங்கையின் சுதந்திர தினத்தன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட கறுப்புக் கொடிப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, நாட்டில் பிரிவினைவாதம் மீண்டும் உருவாவதாகக் கூறி மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் மற்றும் அரசுக்கு எதிரான அமைப்புகள் இது தொடர்பில் விடுத்துள்ள கோரிக்கைகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் கூறுகையில்:-

“கடந்த 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற கறுப்புக் கொடிப் போராட்டங்கள் ஒரு ஜனநாயக நாட்டில் நிலவும் கருத்துச் சுதந்திரத்தின் அங்கமே தவிர, அவை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவோ அல்லது பிரிவினைவாதத்தின் மீள் எழுச்சியாகவோ கருதப்பட வேண்டியதில்லை. இத்தகைய போராட்டங்களை மிகைப்படுத்தி அரசியலாக்குவது தேவையற்ற செயலாகும்.

மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவது அரசின் நோக்கமல்ல. எனினும், தேர்தலை நடத்துவதற்குத் தேவையான எல்லை நிர்ணயப் பிரச்சினைகள், சட்ட ரீதியான சிக்கல்கள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றைச் சீர்செய்வதில் அரசு தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. முறையான சீர்திருத்தங்கள் இன்றி தேர்தலை நடத்துவது மேலதிகக் குழப்பங்களையே ஏற்படுத்தும்.

எதிர்க்கட்சிகளும் அரசுக்கு எதிரான அமைப்புகளும் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை உருவாக்கி, அதன் மூலம் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றன. பிரிவினைவாதத்தைக் காரணமாகக் காட்டித் தேர்தல் கோருவது ஆரோக்கியமான அரசியல் கலாசாரம் அல்ல. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசு எப்போதும் விழிப்புடன் உள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

62 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

90 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

38 0 0