ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவில் நாளை செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்பு.!
இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் விசேட அழைப்பின்படி, ‘AI impact summit 2026’ சர்வதேச மாநாட்டில் பங்கேற்க நாளை (17) செவ்வாய்க்கிழமை மாலை இந்தியா செல்லவுள்ளார்.இந்த மாநாடு, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மனிதகுல நன்மைக்காகவும், பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியப் பிரதமர் தலைமையிலான ஏற்பாடுகளில் நடக்கவுள்ளது.
ஐந்து நாட்கள் நடைபெறவிருக்கும் இம் மாநாட்டில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 19 ஆம் திகதி விசேட உரையாற்றவுள்ளார். உலகளாவிய ரீதியில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45 இற்கும் மேற்பட்ட நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்கிறார்கள்.
இம்மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்கால முன்னெடுப்புகள், உலகளாவிய சவால்களை முறியடிக்க அதனை எவ்வாறு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தலாம் என்பதற்கான விரிவான கலந்துரையாடல்கள் நடக்கின்றன.தனது ஐந்து நாள் விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பல உலகத் தலைவர்களுடன் முக்கிய இருதரப்புப் பேச்சுக்களையும் முன்னெடுக்கவுள்ளார்.