மறைந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி.!
லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் முன்னாள் சிரேஷ்ட அமைச்சருமான மறைந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரணவ் அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கொழும்பில் உள்ள என்.எம். பெரேரா நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் அன்னாரது பூதவுடலுக்கு, நேற்று பிற்பகல் ஜனாதிபதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.இதன் போது பேராசிரியர் திஸ்ஸ விதாரணவ் குடும்பத்தினரை சந்தித்து ஜனாதிபதி தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் நேரில் தெரிவித்தார்.
