இந்து சமயம் மற்றும் அறநெறியை காப்போம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற நடைபவனி.!
இந்து சமயம் மற்றும் அறநெறியை காப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் சிவராத்திரியை முன்னிட்டு மஸ்கெலியா பிரவுன்லோ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சமூக கலாச்சார அறநெறி அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (15) நடைபவனி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மஸ்கெலியா பிரதேசசபை தவிசாளர், உப தவிசாளர், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், மற்றும் புரவுன்லோ ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய நிர்வாக சபையினர் அறநெறி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
நிகழ்வில் அறநெறி பாடசாலை மாணவர்கள் சைவ சமய கொடியான நந்தி கொடிகள் ஏந்திய வண்ணம் பவனியாக சென்றனர்.






