விபத்தில் சிக்கி பாதசாரி ஒருவர் உயிரிழப்பு.!
வெலிப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளுத்கமை – மத்துகம வீதியில் இன்று திங்கட்கிழமை (16) இடம்பெற்ற வீதி விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மத்துகமை நோக்கி சென்ற வேன், வீதியை கடக்க முற்பட்ட பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த பாதசாரி தர்கா நகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் யாசகர் எனவும் அவர் பற்றிய தகவல்கள் தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெலிப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.