உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நாகதேவியின் பக்தி கானங்கள் இறுவெட்டு வெளியீடு..!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
38 பார்வைகள்

நாகதேவியின் பக்தி கானங்கள் இறுவெட்டு வெளியீட்டு விழா பருத்தித்துறை பன்னையம்பதி நாகபூசணி அம்மன் ஆலய தர்மகர்த்தா ஜெயாநத்தம் ஜெயகோபி தலைமையில் நேற்று பிற்பகல் 8:00 மணியளவில் பருத்தித்துறை பன்னையம்பதி நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு மங்கள சுடர்கள் ஏற்றப்பட்டு வெளியீட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதில் ஆசி உரையினை பன்னையம்பதி நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரு பிரம்ம ஸ்ரீ பாலத்தீஸ்வர குருக்கள் நிகழ்தினார்.

வாழ்த்துரைகளை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் கரவெட்டி கோட்டக் கல்வி அதிகாரியும் பரம்பரை சுதேச வைத்தியருமான கதிர்காமு யோகநாதன், உடுதுறை மகா வித்தியாலய ஆசிரியர் க. தயாளன் ஆகியோர் நிகழ்த்தினர்.

இறுவெட்டினை திருமதி. ஜெயகோபி வெளியிட்டு வைக்க நிகழ்வின் பிரதம விருந்தினர் பரம்பரை வைத்தியர் கதிர்காமு யோகநாதன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் மந்திகை மக்கள் வங்கி முகமையாளர் S.அரவிந்தன், j/407 கிராம அலுவலர் வி. சதுர்த்திகா, ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி. வேந்தன், இசைகோயில் வெளியீட்டக தலைவர் பொன். சக்திவேல், கலாபூசணம் கலை பருதி மா. ஜெயானந்தம் ஆச்சாரி, பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல், உப தவிசாளர், பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள், பன்னையம்பதி அடியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வெளியீடு செய்யப்பட்ட 3 பாடலுக்குமான வரிகளை சி. சக்திவேல், V. J நிதர்சன், ஆகியோர் எழுதியிருந்தனர்.

பாடல்களை அனுஷ்கா, சுலக்சன், சி.சக்திவேல் ஆகியோர் பாடியிருந்தனர்.

இசையை erin பிரஷாத் வழங்கியிருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

60 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

89 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

38 0 0