உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நைஜர் மாநிலத்தில் மோட்டார் சைக்கிள் தாக்குதல்: 29 பேர் பலி.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
60 பார்வைகள்

நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள நைஜர் மாநிலத்தில், மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதமேந்திய கும்பல் நடத்திய அதிரடித் தாக்குதலில் குறைந்தது 29 பேர் உயிரிழந்துள்ளனர்.நேற்று முன்தினம் (14) அதிகாலை, சுமார் 41 மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல், தலா 2–3 நபர்களுடன் துங்கா-மேகேரி, கொன்கோசோ மற்றும் பிசா கிராமங்களில் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது.


இந்த தாக்குதலில் வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டு, அடையாளம் தெரியாத மக்கள் கடத்தப்பட்டுள்ளனர். உயிருக்கு அஞ்சிய மக்கள் அருகிலுள்ள புதர்களுக்குள் ஓடி ஒளிந்ததால், கடத்தப்பட்டவர்களின் துல்லியமான எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.உள்ளூர் மக்கள் தெரிவிப்பதாவது, இந்தக் கும்பலின் நோக்கம் கொள்ளை அல்ல; மக்களை கொன்று பயங்கரவாதத்தை ஏற்படுத்துவதே என்பதாகும்.

ஏற்கனவே இப்பகுதியில் ஜிஹாதி அமைப்புகளின் ஆதிக்கம் உள்ள நிலையில், இந்த தாக்குதல் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் இரவு 8 மணிக்குப் பிறகு மோட்டார் சைக்கிள் டாக்ஸிகள் இயக்கத் தடை விதிக்கப்பட்டு, பாதுகாப்புப் படையினரும் மீட்புப் பணிகளுக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.நைஜீரியாவில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் இத்தகைய கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்கள் அரசுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

26 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

43 0 0