உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சட்டத்தரணி படு கொ*லை செய்யப்பட்டமைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம், அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் இன்று (15) விசேட பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட்டி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி தனது கண்டன அறிக்கையை வெளியிட்டது.

அத்துடன், சாய்ந்தமருது பகுதியில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடப்பட்டபோது, சட்டத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் ஜனநாயகத்துக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் நேரடியான அச்சுறுத்தலாகும் என வலியுறுத்தப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸ் திணைக்கள அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

மேலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இத்தகைய கொடூரச் செயல்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் ஆயுத கலாச்சாரத்தை முற்றாக ஒழித்து நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக முழுமையான, சுயாதீனமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், சட்டத்துறையின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தலைமையில் கொழும்பு நகரிலுள்ள சட்டத்தரணிகள் சங்க செயலகத்தில் அமைந்துள்ள கலாநிதி எச்.டபிள்யூ. ஜயவர்தன கேட்போர் கூடத்தில் இன்று நடைபெறும் கூட்டத்தில் நேரில் கலந்து கொள்ள முடியாதிருந்தாலும், அதற்கு தங்களின் முழுமையான ஆதரவை வழங்குவதாக சம்மாந்துறை கிளை அறிவித்துள்ளது.

இந்த ஊடக சந்திப்பில் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா, உப தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். நஸீல், செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி வை.எம்.ஏ. சியாத், பொருளாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ஷாமிலா மன்சூர், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எச். அரூஸ் அடங்கலாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சம்மாந்துறை கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

60 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

89 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0