உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலையில் கறுப்புக்கொடி; சட்ட நடவடிக்கை எடுக்க அரசு முடிவு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

இலங்கையின் சுதந்திர தினத்தன்று, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்களுக்கு எதிராக இம்முறை கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து தமிழர் தாயகத்தில் இம்முறை போராட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன. இதைமுன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி பறக்க விடப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அண்மைய கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருட சுதந்திர தினத்தன்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாணவர்களின் ஒளிப்படங்களுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழகத்துக்கு அறிக்கை அனுப்பியிருந்தது. எனினும், யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பிலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அண்மைய கலந்துரையாடலில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெறாமல் எவ்வாறு தவிர்ப்பது என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பாகவும் விசேட அறிக்கையொன்றை வழங்குமாறு பல்கலைக்கழகத்தைக் கோரியுள்ளது என்றும் தெரியவருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

60 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

89 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0