உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மக்களின் நம்பிக்கையை வெல்வதே எமது இலக்கு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவை அமைச்சர்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்வைத்த விமர்சனங்கள் முற்றிலும் அடிப்படையற்றவை எனக் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ.லால்காந்த தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பிரசன்ன ரணதுங்க கூறுவது போல் தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்கள் சிறுபிள்ளைத்தனமாகச் செயற்படவில்லை. கடந்த காலங்களில் நாட்டைச் சீரழித்த ஊழல் மற்றும் முறையற்ற நிர்வாகத்தை மாற்றி, ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதையே எமது அமைச்சர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

பிரசன்ன ரணதுங்க போன்ற எதிரணியினர், மக்கள் வழங்கிய புதிய அரசியல் ஆணையைச் சகித்துக் கொள்ள முடியாமல் இவ்வாறான விரக்தி கலந்த கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அமைச்சரவை மிகவும் அர்ப்பணிப்புடன், மிகக் குறுகிய காலத்துக்குள் பல ஆக்கபூர்வமான மாற்றங்களைச் செய்துள்ளது.

அமைச்சர்களின் செயற்றிறன் இன்மையால் அரசு வீழ்ச்சியடையும் என்பது எதிரணியினரின் வெறும் பகற்கனவு மாத்திரமே. மக்களின் நம்பிக்கையை மென்மேலும் வென்றெடுக்கும் வகையில் எமது திட்டங்களை நாங்கள் உறுதியுடன் முன்னெடுத்து வருகின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

59 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0