உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அலுவலகங்களுக்குள் முடங்கிக் கிடக்காமல் அனைவரும் கிராமங்களுக்குச் செல்லுங்கள்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

“2026ஆம் ஆண்டு அபிவிருத்திக்குரிய ஆண்டு. எனவே, அதிகாரிகள் ‘அபிவிருத்தி நிர்வாகத்தை’ முன்னெடுக்கத் தயாராக வேண்டும். சாதாரண நிர்வாகத்தைப் போன்று அல்லாது, அபிவிருத்தி நிர்வாகத்தை முன்னெடுப்பதற்குத் துரித முடிவெடுக்கும் ஆற்றலும், வேலையின் மீதான அர்ப்பணிப்பும் மிக அவசியம். இந்தக் கொள்கையுடன் அனைவரும் எம்மோடு இணைந்து பயணிக்க வேண்டும்.” – இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடல், நேற்று சனிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் ஆளுநர் வழங்கிய முக்கிய பணிப்புரைகள் வருமாறு,
“கடந்த 2025ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் பின்னூட்டங்கள் பெறப்பட்டு, அவை நிதி ஆணைக்குழு மற்றும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, இந்த ஆண்டுக்கான திட்டங்களைக் கையாள வேண்டும்.

2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் மதிப்பீட்டுப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் கீழான திணைக்களங்கள் ஏற்கனவே கேள்வி கோரல்களைப் பிரசுரித்துள்ளமை பாராட்டத்தக்கது. ஏனைய அமைச்சுக்களும் இச்செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில், ஒப்பந்தகாரர்களின் வேலைத்தரம் குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவே, இனிவரும் காலங்களில் தரம் குறைந்த வேலைகளைச் செய்யும் ஒப்பந்தகாரர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அல்லது நிராகரிப்பதற்கான முறையான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும்.

அலுவலகங்களுக்குள் மட்டும் முடங்கி இருக்காது, ஒவ்வொரு அமைச்சும் ஒவ்வொரு மாதமும் மாகாணத்தின் ஏதாவது ஒரு கிராமத்தைத் தெரிவு செய்து, அங்கு நேரடியாகச் சென்று மக்களின் தேவைகளை அடையாளப்படுத்தி, அவற்றைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கெனத் தனியானதொரு பொறிமுறையை அமைச்சுக்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

திணைக்களங்களைக் கண்காணிப்பதற்காக, ஒவ்வொரு அமைச்சின் செயலாளர்கள் ஊடாகவும் அமைக்கப்பட்ட ‘பறக்கும் படை’ மேலும் வினைத்திறனாகச் செயற்பட வேண்டும். அரச அலுவலர்களின் நேர முகாமைத்துவம் மற்றும் சேவை வழங்கல் குறித்துப் பொதுமக்களிடமிருந்து எனக்குப் பல நேரடி முறைப்பாடுகள் வருகின்றன. பறக்கும் படை துடிப்பாகச் செயற்பட்டால் இத்தகைய குறைபாடுகளைத் தவிர்க்க முடியும்.

சில உள்ளூராட்சி மன்றங்களில் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு இடையில் சுமூகமான உறவு இல்லாத நிலை காணப்படுகின்றது. இரு தரப்பிலிருந்தும் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் வருகின்றன. இது தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தித் தீர்வு காணப்படும்.

இவ்வருடம் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதால், மேலதிக வேலைகளுக்குத் தேவையான தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கான ஆயத்தங்களை இப்போதே மேற்கொள்ள வேண்டும். அதேவேளை, வழமையான வேலைத்திட்டங்களை விரைவாக நிறைவு செய்து, அபிவிருத்திப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.” – என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு அமைச்சினதும் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் தனித்தனியாக நடைபெறும் எனவும் இதன்போது அறிவிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

59 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

89 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0