உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சட்டத்தரணியும், அவரது மனைவியும் சுட்டுக் கொ*லை; சந்தேகநபர்கள் பயணித்த மகிழுந்து தீக்கிரை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
37 பார்வைகள்

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணியையும், அவரின் மனைவியையும் சுட்டுக் கொலை செய்த சந்தேகநபர்கள் பயணித்தாக சந்தேகிக்கப்படும் மகிழுந்து தீக்கிரையான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காலி – அகலிய, குட்டியாவத்தை பகுதியில் உள்ள வீதியொன்றில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகிழுந்து கண்டெடுக்கப்பட்ட போது அது தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸார் அங்கு விரைந்த சந்தர்ப்பத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாக குறிப்பிட்டனர்.

இந்தக் கொலையானது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினரான “கரந்தெனிய சுத்தா” எனப்படும் ஜயலத் சில்வா என்பவரால் வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த சட்டத்தரணி முன்னர் கரந்தெனிய சுத்தாவின் வழக்குகளுக்காக ஆஜராகி வந்ததாகவும், பின்னர் அவரது எதிரியான “லொக்கு பெட்டி” எனப்படும் குற்றவாளியின் வழக்குகளுக்காக ஆஜராகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக, கரந்தெனிய சுத்தா தொடர்பான தகவல்களை லொக்கு பெட்டிக்கு வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சுத்தாவின் தரப்பினரால் இந்த கொலைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என பொலிஸார் முன்னர் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பாக நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

59 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0