உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அரகலய போராட்டத்தை வன்முறையாக மாற்றியவர்கள் ராஜபக்ஷக்களே.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

‘அரகலய’ போராட்டத்தை வன்முறைப் பாதைக்கு இட்டுச் சென்றவர்கள் ராஜபக்ஷக்களே என்றும், அமைதியான போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களே அதன் பின்விளைவுகளுக்குப் பொறுப்பு என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

அரகலய போராட்டத்தின் பின்னணி மற்றும் வெளிநாட்டு நிதி தொடர்பாகத் தமது ஆட்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று நாமல் ராஜபக்ஷ எம்.பி. விடுத்திருந்த கருத்துக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து ஊடகங்களிடம் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
“அரகலய போராட்டம் என்பது ஆரம்பத்தில் மிகவும் ஜனநாயக ரீதியாகவும், அமைதியான முறையிலுமே முன்னெடுக்கப்பட்டது. ஆனால், நீண்ட நாட்களாக அமைதியாக இடம்பெற்று வந்த இந்தப் போராட்டத்தின் மீது ராஜபக்ஷ தரப்பினரே தாக்குதல்களை ஏவிவிட்டனர். அந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்தே நிலைமை கலவரமாக மாறியது. எனவே, அமைதியான போராட்டத்தை சிதைத்து, அதனை வன்முறையாக மாற்றியவர்கள் யார் என்பது குறித்துத்தான் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் தன்னிச்சையாக வீதிக்கு இறங்கிப் போராடினார்கள். அதனை வெளிநாட்டுச் சதி என்று கூறுவது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அவமதிக்கும் செயலாகும். தமது அரசியல் தோல்விகளை மறைக்கவே இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் குறித்து எமது அரசு முறையான விசாரணைகளை முன்னெடுக்கும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்துவோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

59 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0