உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அரகலய போராட்டத்தின் பின்னணியில் உள்ள சக்திகள் யார்? – எமது ஆட்சியில் ஆணைக்குழு மூலம் விசாரணை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

‘அரகலய’ போராட்டத்தின் பின்னணி மற்றும் அதற்காக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெற்ற நிதி தொடர்பில், எதிர்காலத்தில் அமையவுள்ள எமது ஆட்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
“தேசிய மக்கள் சக்தி அரசு நாட்டு மக்களுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று தாமே பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் இத்தகைய முறைகேடுகள் குறித்து நாம் கேள்வி எழுப்புவதாலேயே, எமக்கு எதிராகப் பல்வேறு அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

தமது குறுகிய அரசியல் நலன்களுக்காக இளைஞர்களின் வாழ்க்கையைப் பணயம் வைக்கும் தந்திரோபாயத்தை ஜே.வி.பி. 1988ஆம் ஆண்டிலிருந்தே கடைப்பிடித்து வருகின்றது. இவர்களது இத்தகைய செயற்பாடுகளால் கடந்த காலங்களில் பல இளைஞர்கள் உயிரை இழந்துள்ளனர். கடந்த ‘அரகலய’ போராட்டத்தின் போதும் இதையே நாம் கண்டோம்.

அரகலய போராட்டம் எவ்வாறு திட்டமிடப்பட்டது? அதன் பின்னணியில் இருந்த சக்திகள் யார்? குறிப்பாக, அந்தப் போராட்டத்துக்காக வெளிநாடுகளில் இருந்து வந்த பெருமளவிலான பணம் மற்றும் அதன் உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து எமது ஆட்சியில் முறையான விசாரணை நடத்தப்படும். இதற்காக விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு உண்மைகள் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

59 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0