உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வவுனியாவில் இருசக்கர வாகன திருட்டில் இன்று மூவர் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

வவுனியாவில் நேற்று நடந்த இருசக்கர வாகன திருட்டுச் சம்பவத்தில் ஒரு பெண்உட்பட மூவர் இன்று கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.மூன்று நாட்களுக்கு முன்பு, வவுனியா, சதோசா வீதி பகுதியில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது. திருடப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தார்.


வவுனியா தலைமைக் காவல் நிலைய பொறுப்பதிகாரி பீ.எஸ். வீரத்தினின் வழிகாட்டலில், குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பீ. இலங்கசிங்க தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த விசாரணைகளில், இரணைஇலுப்பக்குளம்மடு பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய கணவர், 25 வயதுடைய மனைவி மற்றும் 31 வயதுடைய மனைவியின் மைத்துனர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.விசாரணைகளில் ரூ.3,00,000 மதிப்புள்ள திருட்டுப் பொருள் மீட்கப்பட்டது. வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0