காதலர் தினத்தில் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை.!
இலங்கையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை ரூ. 5,000 அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச மற்றும் உள்ளூர் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,041 அமெரிக்க டொலராக பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், வெள்ளியின் விலையும் அதிகரித்து ஒரு அவுண்ஸ் வெள்ளி 77.41 டொலராக பதிவாகியுள்ளது.
இதன்படி, நாட்டில் தங்க விலை பின்வருமாறு இருக்கிறது: 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபா, கிராம் ஒன்று 49,375 ரூபா; 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 365,400 ரூபா, கிராம் ஒன்று 45,675 ரூபா. இந்த விலை நகை கடைகளில் விற்பனைக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.