வேகக் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் கவலைக்கிடம்.!
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.புன்னாலைக்கட்டுவன் வடக்கு சந்தியிலிருந்து நிலாவரை நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பாரவூர்தியுடன் பலமாக மோதியுள்ளது.இந்த மோதலில் இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
விபத்துக்குப் பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற சுன்னாகம் பொலிஸார், விபத்துக்குள்ளான வாகனங்களைப் பொறுப்பேற்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இருசக்கர வாகனத்தின் அதீத வேகமே விபத்திற்கான பிரதான காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.