மனைவியை உயிரோடு தீ வைத்து எரித்து கொ*லை செய்ததாகக் கணவர் மீது குற்றச்சாட்டு.!
அனுராதபுரம் மாவட்டத்தின் பரசன்கஸ்வெவ பிரதேசம், மெதகம பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் உயிரிழந்தவர் பரசன்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தினருக்கிடையில் ஏற்பட்ட தகராறு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இந்தக் கொலை நடைபெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் கணவரை கைது செய்வதற்காக பரசன்கஸ்வெவ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.