உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தபால் சேவையை நவீனமயமாக்க புதிய வாகனங்கள் சேவையில்!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

இலங்கை தபால் சேவையை நவீனமயமாக்கும் ஒரு பகுதியாக, நேற்று நாட்டளாவிய தபால் போக்குவரத்து வலையமைப்பில் 10 பாரவூர்திகள் மற்றும் 20 க்ரூ கெப் வாகனங்கள் இணைக்கப்பட்டன. இந்த புதிய வாகனங்களின் மொத்த பெறுமதி 590 மில்லியன் ரூபாவுக்கு மேல் வரை உள்ளது.அரசாங்கம் இந்த முழுமையான திட்டத்திற்கு மொத்தம் 849 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது

.
தபால் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்த புதிய வாகனங்கள் நாடளாவிய ரீதியில் தபால் பொருட்கள், பணம் செலுத்தி பெறும் சேவை மற்றும் SL Post Courier சேவைகளை விரைவுபடுத்த பயன்படுத்தப்படவுள்ளன.


மேலும், தபால் ஊழியர்களுக்கான துவிச்சக்கரவண்டி தாங்கிகள், அலுவலக திறனை அதிகரிக்க கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் டெப்லெட்கள் வழங்கப்பட்டன.தபால் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க புதிய “செயற்பாட்டுக் கட்டுப்பாட்டு மற்றும் பதிலளிப்புப் பிரிவு” திறப்பு செய்யப்பட்டது.தபால் தலைமையகம், மத்திய தபால் பரிவர்த்தனை நிலையம் மற்றும் மட்டக்களப்பு தபால் நிலையங்களில் சூரிய சக்தித் தகடுகள் பொருத்தப்படவுள்ளன.


கடந்த ஆண்டு ஏற்பட்ட சவால்களை எதிர்கொண்டும், தபால் திணைக்களம் 13,450 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. சேவையை வலுப்படுத்த 2,800 பணியாளர்கள் புதிதாக இணைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.அமைச்சர் இதன்போது, தபால் சேவையை மேலும் நவீனப்படுத்தி அதன் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், பொதுமக்கள் இச்சேவைகளை அதிகளவில் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

57 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

99 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

88 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

37 0 0