உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மதுவரித் திணைக்கள வரி வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

மதுவரித் திணைக்களத்தின் வரி வருமானத்தை அதிகரித்தல் மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளுக்கான செயற்பாட்டுக் குழுவின் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிசாந்த ஜயவீர மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, மதுவரித் திணைக்களத்தின் செயல்பாடுகளை மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும் செயற்திறனாகவும் முன்னெடுப்பதற்காக இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவுசெய்ய உத்தேசிக்கப்பட்ட மதுவரி வருமான முகாமைத்துவக் கட்டமைப்பின் முன்னேற்றம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

தற்போதைய அரசாங்கத்தின் அரச நிறுவன நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் மற்றும் மறுசீரமைப்புகளுக்கு உயர் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக பிரதி அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

மதுவரித் திணைக்களத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து அதிகாரிகளும் இதற்கு முழு ஆதரவைத் தெரிவித்தனர்.மேலும், மதுவரித் திணைக்களம் கடந்த 2025 ஆம் ஆண்டில் அடையப்பட்ட நிதி செயற்பாடுகளுக்காக பிரதி அமைச்சர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பாராட்டியதுடன், இந்த ஆண்டு மேலும் உயர் நிதி முன்னேற்றத்தை அடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மதுவரித் திணைக்கள அதிகாரிகள் உறுதியளித்தனர்.

தற்போதைய சமூக மற்றும் தொழில்நுட்ப போக்குகளுக்கு ஏற்ப மதுவரிக் கட்டளைச் சட்டத்தை திருத்தும் பணிகளை விரைவுபடுத்தவும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் திருத்தங்களை நிறைவு செய்து சட்டவரைஞருக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

மதுவரித் திணைக்களத்தின் செயல்திறனை அதிகரிக்க புதிய சேவை யாப்பின் அவசியத்தை குழு வலியுறுத்தியதுடன் இதற்கு மேலதிகமாக அதிகாரிகளின் பதவி உயர்வுகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், நாட்டில் சட்டவிரோத மது வர்த்தகம் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதில் பொதுமக்களின் ஆதரவைப் பெற, எந்தவொரு பகுதியிலும் நிகழும் மது மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் குறித்த தகவல்களை 1913 என்ற அவசர இலக்கத்தின் மூலம் மதுவரித் திணைக்களத்திற்கு தெரிவிக்குமாறு மதுவரித் திணைக்களத்தின் வரி வருமானத்தை அதிகரித்தல் மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளுக்கான செயற்பாட்டுக் குழு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

98 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

87 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

36 0 0