ஹட்டனில் வீடு புகுந்து ஒன்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட தங்க நகைகள் திருட்டு.!
ஹட்டன் நகரில் உள்ள வீடொன்றுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து 9,62,500 ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை திருடியதாகக் கூறப்படும் 36 வயதுடைய நபர் ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், யூனிஃபீல்ட் தோட்டம் கே.ஜி.கே பிரிவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.ஹட்டன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுகததாச அவர்களுக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் பெப்ரவரி 11ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து, சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.