சிறப்பாக இடம்பெற்ற யா/பொற்பதி றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி.!
யாழ். வடமராட்சி கிழக்கு பொற்பதி றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் பாடசாலை அதிபர் திரு.சிவராசா குகதாசன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கபட்டத்தை தொடர்ந்து மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான ரஜீபன் அவர்கள் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினராக திரு செ.சிறிராமசந்திரன் மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் அவர்களும் மற்றும் அருட்தந்தை ஜோன் குரூஸ் மணற்காட்டு பங்கு தந்தை அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன் கௌரவ விருந்தினராக திரு.சிவசம்பு தர்மரத்தினம் அவர்களும் கலந்து கொண்டனர்.
பாடசாலை மட்ட விளையாட்டுகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசிகள், சான்றிதழ்களையும், கருந்துரைகளையும், நிகழ்வின் விருந்தினராக கலந்துகொண்டவர்கள் வழங்கினார்கள்.



